இடுகைகள்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

தீவிர தேசியவா த த்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மிதவாத தேசியவாதிகளின்கவனமான அணுகுமுறை , ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் , மனுச் சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் “ இறைஞ்சுதல் கொள்கைகளை ” கடுமையாக விமர்சித்தனர் . மகாராஷ்டிராவில் -- பாலகங்காதர திலகர் , வங்காளத்தில் -- பிபின்சந்திரபால் , பஞ்சாபில் -- லாலாலஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது . சுதேசி இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றநிலையில் , தேசிய இயக்க நடவடிக்கைகளை , அவை எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு , பொதுக்கூட்டங்கள்சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள்சட்டம் , தூண்டுதல் குற்றச் சட்டம் (1908), இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது . வங்கப் பிரிவினை                1899 ஜனவரி 6இல் புதிய தலைமைஆ ளு ந ராக வு ம் இந்தியாவின் அரசப் பி ர தி நி தி யாக வு ம் கர்சன்பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார். வங்காளத்தைப்  பிரிக்க1905இல் ஆணைபிறப்பித்தார். இப்பிரிவினை இந்த

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி                  இந்தியாவை முன்னைக் காட்டிலும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவும்  கட்டுப்படுத்துவதற்காகவும் இந்திய அரசியலை, பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்துவதில் ஆங்கிலேயர்வெற்றி பெற்றனர். இவ்வெற்றி தவிர்க்கியலாத வகையில் தேசிய உணர்வின் வளர்ச்சிக்கும், தேசிய இயக்கம் தோன்றுவதற்கும் இட்டுச் சென்றது.                 கி.பி. (பொ.ஆ) 1915இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி, 1919இல் இந்திய தேசிய இயக்கத்திற்கு அவர் தலைமையேற்றதிலிருந்து இந்திய தேசியம் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது. காந்தியடிகளுக்கு முன்னர் தாதாபாய்நௌரோஜி, கோபாலகிருஷ்ணகோகலே, பிபின் சந்திர பால், லாலாலஜபதி ராய், பாலகங்காதர திலகர் போன்றோரும், ஏனையோரும் காலனியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டனர். புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்டபாதிப்புகள்                   ஆங்கிலேயர் பயிர்கள் விளையாமல் போவது, விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி, வறட்சி, பஞ்சம் போன்ற நிகழ்வுகளைக் கணக்கில் கொள்ளாமல்

ஐரோப்பியர்களின் வருகை

  ஐரோப்பியர்களின் வருகை                  நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக- பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன. தொடக்க காலத்திலிருந்தே போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலகசெயல்பாடுகளை தங்களது அரசாங்கப்பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்.         எழுதப்பட்ட ஆதாரங்கள்                                    இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப்பற்றி மார்க்கோபோலோ மற்றும் சிலவெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர். தமிழ் வரலாற்றுக்குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம்.  ஆவணக்காப்பகங்கள்                 இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது.   ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் 'சென்னைபதிப்பாசனம்' சென்னையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிக

ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்

  ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்                    பழங்காலத்தில் இந்தியா பிற நாடுகளோடு வாணிகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தது. இதனால், இந்திய மொழிகள், சமயங்கள், கலை, கட்டிடக் கலை, தத்துவங்கள், நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் அந்நாடுகளில் பரவின. தென்கிழக்கு ஆசியாவின் ஒருசில பகுதிகளில் பண்டைய இந்திய அரசியல்ஆர்வலர்கள் இந்து அரசுகளையும் கூட அமைத்தனர். மத்திய ஆசியா                கிறித்துவ சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மத்திய ஆசியப் பகுதி இந்தியப்பண்பாட்டின் மையமாகத் இருந்தன. ஆப்கானிஸ்தானத்தின் கிழக்குப் பகுதியில் ஏராளமான  பண்பாட்டு சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோடான், காஷ்கர் போன்ற இடங்கள் இந்தியபண்பாட்டின் மையங்களாகும். அங்கு, பல வடமொழி நூல்களும், புத்தசமய மடாலயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்தியாவும் -சீனாவும்                 மத்திய ஆசியா வழியாக நிலவழித்தடமும், பர்மா வழியாக கடல் வழித்தடமும் இந்தியப் பண்பாடு சீனாவுக்குச் செல்ல பேருதவியாக இருந்தன. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்த சமயம்சீனாவில் பரவியது. பாஹியான், யுவான் சுவாங் உள்ளிட்ட பல்வேறு சீனப் பயணிகள் இந்தியாவிற்குவந்தனர்